ஆன்மிகம்
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை

நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை

Published On 2020-12-22 08:12 GMT   |   Update On 2020-12-22 08:12 GMT
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் கொரோனா காரணமாக கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலவராகவும், உற்சவராகவும் கல்கருட பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் இக்கோவிலில் கல்கருட சேவை நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி நேற்று கருடசேவை நடைபெற்றது. கொரோனா காரணமாக கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் கருட வாகனத்தில் பெருமாள் தாயார் கோவிலில் இருந்து வாசல் வரை சென்று மீண்டும் கோவிலுக்குள் வந்தது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெளியில் நின்று கருட பகவானையும் பெருமாள் தாயாரையும் தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News