செய்திகள்
நிதிஷ் ராணா

நிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2020-10-29 15:43 GMT   |   Update On 2020-10-29 15:43 GMT
நிதிஷ் ராணா அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு -- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்ற வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதுல் ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரில் சாஹர் மூன்று பவுண்டரிகள் விட்டுகொடுத்தார். அடுத்த ஓவரில் சாம் கர்ரன் 3 ரன் கொடுத்து கட்டுப்படுத்தினார். அடுத்த ஓவரில் சாஹர் 7 ரன் விட்டுக்கொடுத்தார்.

6-வது ஓவரை சான்னெர் வீசினார். இந்த ஒவரில் ராணா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க 15 ரன் விட்டுக்கொடுத்தது சிஎஸ்கே. இதனால் பவர் பிளேயில் கொல்கத்தா 48 ரன்கள் அடித்தது.

கொல்கத்தா அதிக ரன்கள் குவிக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஜடேஜா, கரண் சர்மா ரன் கொடுப்பதை கட்டுப்படுத்தினர். 8-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷுப்மான் கில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுனில் நரைனை சான்னெர் 7  ரன்னில் வெளியேற்றினார். இதனால் 10 ஓவரில் 70 ரன்கள் எடுத்த கொல்கத்தா.

அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா 44 பந்தில் அரைசதம் அடித்தார். கொல்கத்தா 15 ஓவரில் 106 ரன்கள் எடுத்திருந்தது.

16-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் நிதிஷ் ராணா தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். அடுத்த 3 பந்தில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா 16 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்தது.

17-வது ஓவரில் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரியுடன் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். முதல் பந்தில் 61 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ராணாவை வெளியேற்றினார். என்றாலும் இரண்டு பவுண்டரிகளுடன் 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தது சிஎஸ்கே. 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 163 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மோர்கன், 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்தில் ஐந்து ரன்களுடன் கடைசி ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது. டெத் ஓவரான கடைசி 6 ஓவரில் 67 ரன்கள் அடித்துள்ளது.
Tags:    

Similar News