செய்திகள்
மீன்

மீன் வளர்ப்புக்கு மானியம்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்

Published On 2021-08-12 09:50 GMT   |   Update On 2021-08-12 09:50 GMT
புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்து மீன் குஞ்சு வளர்ப்பு செய்ய திருவாரூர் மாவட்டத்துக்கு மொத்தம் 3 எக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை விரிவுபடுத்தவும், மீன்குஞ்சு உற்பத்தியினை அதிகரிக்கவும் மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி புதிய மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு செய்ய திருவாரூர் மாவட்டத்துக்கு மொத்தம் 5 எக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு எக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து மீன் குளம் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் உள்ளீட்டு மானியமாக மீன் குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 40 சதவீத மானியமாக ரூ.60 ஆயிரமும் வழங்கப்படும்.

புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்து மீன் குஞ்சு வளர்ப்பு செய்ய திருவாரூர் மாவட்டத்துக்கு மொத்தம் 3 எக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீன்குஞ்சு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு எக்டேரில் ரூ.6 லட்சம் செலவு செய்து மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் மற்றும் உள்ளீட்டு மானியமாக மீன்குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 40 சதவீத மானியமாக ரூ.60 ஆயிரமும் வழங்கப்படும்.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருத்தல் வேண்டும்) மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். கடந்த 2018-19-ல் இருந்து 2020-21-ம் ஆண்டு உள்ள கால கட்டத்தில் மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்து மத்திய, மாநில அரசு நிவாரணம் ஏதும் பெறாதவர்கள் மானியம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வருகிற 17-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News