வழிபாடு
எருமேலி ஐயப்பன்

எருமேலி பெயர் காரணம்

Published On 2022-01-27 05:59 GMT   |   Update On 2022-01-27 05:59 GMT
முதல் முறையாக மாலை அணிந்து வரும் கன்னி ஐயப்பன் சாமிகள் எருமேலியில் பேட்டை துள்ளிய பின்புதான் சபரிமலை பயணத்தை தொடருவார்கள்.
சுவாமி ஐயப்பன் புலிப்பால் தேடிச்சென்றபோது எருமேலியில் மகிஷியை அழித்தார். எருமை தலையுள்ள மகிஷியை அழித்த இடம் எருமைக்கொல்லி என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது "எருமேலியாக”மாறிவிட்டது. இங்கு ஐயப்பன் கையில் வில் ஏந்தியபடி நிற்கிறார். மற்றும் பகவதி, நாகராஜர் சிலைகளும் உள்ளன. முதல் முறையாக மாலை அணிந்து வரும் கன்னி ஐயப்பன் சாமிகள் எருமேலியில் பேட்டை துள்ளிய பின்புதான் சபரிமலை பயணத்தை தொடருவார்கள்.

ஐயப்பனின் உற்ற நண்பரான வாவர் பள்ளியும் இங்குதான் உள்ளது. எருமேலி பேட்டை துள்ளி வரும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்துவார்கள். அங்கும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. பேட்டை துள்ளல் கொச்சம்பலத்தில் தொடங்கி வலிய அம்பலத்தில் முடிவடைகிறது.
Tags:    

Similar News