செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி செய்ய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-07-22 08:35 GMT   |   Update On 2021-07-22 08:35 GMT
தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கோரி, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட, தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கோரி, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா பகுதி பாலைவனமாகி விடும் என்பதால், அந்த திட்டத்திற்கு தமிழகம் ஒப்புதல் தரவில்லை.

அதற்காக தங்களுக்கு தொடர்பில்லாத, தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல். பொறாமையின் வெளிப்பாடு.

உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழக மக்களுக்கு பயன்படக்கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

எனவே, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவையான சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News