செய்திகள்
மைக்ரோசிப்

தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக வைரலாகும் பகீர் தகவல்

Published On 2020-09-30 05:03 GMT   |   Update On 2020-09-30 05:03 GMT
தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை சுமார் 150-க்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் உலகம் முழுக்க கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 26 மருந்துகள் மனித உடலில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனுடன் வரும் வீடியோவில், மைக்ரோசிப் உருவாக்கிய குழுவில் அங்கம் வகித்த திட்ட மேலாளர் என கூறும் நபர் பகீர் தகவல்களை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வீடியோ 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வீடியோவில் இருப்பது அமெரிக்க மத போதகர் கால் சாண்டர்ஸ் ஆகும். உண்மையில் இவர் மைக்ரோசிப்களை பற்றியே பேசி இருக்கிறார். எனினும், இவர் கொரோனாவைரஸ் பற்றி பேசவில்லை.

அந்த வகையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட இருப்பதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News