ஆன்மிகம்
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.66 லட்சத்தில் தேர் செய்யும் பணி

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.66 லட்சத்தில் தேர் செய்யும் பணி

Published On 2020-10-15 04:29 GMT   |   Update On 2020-10-15 04:29 GMT
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் அரங்கநாதர் கோவிலின் 2 தேர்கள் செய்ய ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் அரங்கநாதர் கோவிலின் தேர் பழுதடைந்துவிட்டது. அதனால் புதிய தேர் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முயற்சியின் காரணமாக, புதிய தேர் செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்காக 2 தேர்கள் செய்ய ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் பொறியாளர் ராகவன், மண்டல ஸ்தபதி ஜெகநாதன், செயல் அலுவலர் சிவாஜி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தேரின் அகலம், நீளம், அதன் உறுதிப்பாடு குறித்து பார்வையிட்டு, தேர் பணிகளை நேர்த்தியாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News