ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி

மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-10-09 11:41 GMT   |   Update On 2020-10-09 11:41 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி இகியூசி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி விலை ரூ. 99.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த விலை முதல் 50 யூனிட்களுக்கு மட்டும் தான் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விலையில் வால் மவுண்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளரின் வீடு அல்லது பணியிடத்தில் இன்ஸ்டால் செய்யப்படும். புதிய இகியூசி மாடல் இந்தியாவின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் ஆடம்பர எஸ்யுவி மாடல் ஆகும். இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் ஆடி இ டிரான் மாடலுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.



முதற்கட்டமாக இந்த எஸ்யுவி மாடல் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் என ஆறு நகரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

பென்ஸ் இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 80 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 471 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News