செய்திகள்

உ.பி. முகல்சராய் ரெயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் என மாற்றம்

Published On 2017-10-14 09:35 GMT   |   Update On 2017-10-14 09:35 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் முகல்சராய் ரெயில் நிலையம், இனி பண்டிட் தீனதயாள் உபாத்யாய் என அழைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி வருகிறது. 
 
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி அருகில் உள்ள முகல்சராய் ரெயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முகல்சராய் ரெயில் நிலையத்தின் பெயரை பண்டிட் தீனதயாள் உபாத்யாய் ரெயில் நிலையம் என மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகத்திடம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை  பரிந்துரை செய்திருந்தது. உள்துறை அமைச்சகமும் ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, முகல்சராய் ரெயில் நிலையம் இனி பண்டிட் தீனதயாள் உபாத்யாய் ரெயில் நிலையம் என அழைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஜனசங்கத்தின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயின் சேவையை போற்றும் வகையில் முகல்சராய் ரெயில் நிலையத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News