ஆன்மிகம்
இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை நடக்கிறது

Published On 2021-04-08 08:34 GMT   |   Update On 2021-04-08 08:34 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலி்ல் பங்குனி மாதம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விழாவையொட்டி அதிகாலை முதல் அம்மனுக்கு அபிேஷகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்வர். இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News