ஆன்மிகம்
கெங்கையம்மன்

கீழ்ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா

Published On 2021-04-29 04:10 GMT   |   Update On 2021-04-29 04:10 GMT
கொரோனா 2-வது அலை பரவி வருவதால் மிக எளிய முறையில் கெங்கையம்மன் திருவிழாவை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்படி ஊர் மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து திருவிழாவை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் எளிய முறையில் நடந்தது.

அதே போல் இந்த ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழாவை நடத்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், கொரோனா 2-வது அலை பரவி வருவதால் மிக எளிய முறையில் கெங்கையம்மன் திருவிழாவை நடத்த அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ஊர் மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து திருவிழாவை நடத்தினர். அப்போது அம்மன் சிரசை அலங்காரம் செய்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச்சென்று கெங்கையம்மன் கோவிலில் வைத்து முழு உடல் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதில் பக்தர்கள் ஒவ்வொரு நபராக வந்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோலாகலமாக நடக்கும் கோவில் திருவிழா இந்த ஆண்டு மிக எளிமையாக நடந்தது.
Tags:    

Similar News