விளையாட்டு
ஐபிஎல்

ஐபிஎல் கடைசி போட்டியின்போது நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்

Published On 2022-04-16 09:41 GMT   |   Update On 2022-04-16 10:18 GMT
நிறைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆரம்ப நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் இந்த ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி,

இந்த ஆண்டின் கடைசி ஐபிஎல் போட்டி மே 29-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. அன்று நிறைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு மேடை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ப்ரோபசல் ஆவணம் ரூ.1 லட்சத்திற்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25 வரை இந்த ப்ரோபோசல் ஆவணம் கிடைக்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News