செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் - 2 நாட்கள் நடக்கிறது

Published On 2021-09-15 07:07 GMT   |   Update On 2021-09-15 07:07 GMT
19,20,30 ஆகிய வார்டுகளுக்கு நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகத்திலும், 31,32,33 ஆகிய வார்டுகளுக்கு மண்ணரை மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் முகாம் நடக்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை16-ந் தேதி, 21-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. 

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நாளை 16-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

நாளை16-ந்தேதி 1-வது மண்டலத்தில் வார்டு எண்கள் 2,3,4 ஆகிய பகுதி மக்களுக்கு செட்டிப்பாளையம் இந்திராநகர் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரிவு அலுவலகத்திலும், வார்டு எண்கள் 4,5,7,8,9 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு அங்கேரிப்பாளையம் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், 2-வது மண்டலத்தில் 16,17,18 ஆகிய வார்டுகளுக்கு நெருப்பெரிச்சல் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் நடக்கிறது.

19,20,30 ஆகிய வார்டுகளுக்கு நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகத்திலும், 31,32,33 ஆகிய வார்டுகளுக்கு மண்ணரை மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், 34,35,38,39,40,41 ஆகிய வார்டுகளுக்கு நல்லூர் மண்டல அலுவலகத்திலும், 4-வது மண்டலத்தில்  52,53,54 வார்டுகளுக்கு வீரபாண்டி மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், 55,57,58 ஆகிய வார்டுகளுக்கு முருகம்பாளையம் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் முகாம் நடக்கிறது. 

இதுபோல் வருகிற 21-ந் தேதி 12,13 ஆகிய வார்டுகளுக்கு மாஸ்கோ நகர் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரிவு அலுவலகத்திலும், 1,6,10,11,14,15 ஆகிய வார்டுகளுக்கு வேலம்பாளையம் மண்டல அலுவலகத்திலும், 26,27,28,29 ஆகிய வார்டுகளுக்கு பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகத்திலும், 21,22,23,24,25 ஆகிய வார்டுகளுக்கு புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 

36,37 ஆகிய வார்டுகளுக்கு முத்தணம்பாளையம் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், 42,43,44,45 ஆகிய வார்டுகளுக்கு தாராபுரம் ரோடு மேல்நிலைத்தொட்டி அலுவலகத்திலும், 56,59,60 வார்டுகளுக்கு ஆண்டிப்பாளையம் மண்டல அலுவலகத்திலும், 46,47,48,49,50,51 ஆகிய வார்டுகளுக்கு ராயபுரம் குடிநீர் தொட்டி பொறியாளர் பிரிவு அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது. 

முகாம்கள் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News