செய்திகள்
மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள்.

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2021-02-21 09:42 GMT   |   Update On 2021-02-21 09:42 GMT
மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர்.
மணப்பாறை:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நடத்தப்படுவது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்கும்.

அந்த வகையில் இன்று மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புனித அந்தோணியார் ஜல்லிக்கட்டு திருவிழாவை வட்டாட்சியர் லெஜபதிராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலில் சிறப்பு திருப்பலிக்கு பின்னர் ஊர் முக்கியஸ்தர் காளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

ஒரு சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டி அடித்து அருகில் கூட நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.

இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல் சிறந்த காளை மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News