ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 அறிமுகம்

Published On 2019-05-17 10:31 GMT   |   Update On 2019-05-17 10:31 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் 2019 எக்ஸ்5 காரை அறிமுகம் செய்துள்ளது.



பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதிய தலைமுறை எக்ஸ்5 காரை இந்தியவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எஸ்.யு.வி. காரின் விலை ரூ.72.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் மொத்தம் 12 வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவற்றில் புதிய தலைமுறை எக்ஸ்5 மாடலும் ஒன்றாகும்.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 இருவித டீசல் மாடல்கள்- பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ்30டி ஸ்போர்ட் மற்றும் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ்30டி எக்ஸ்-லைன் கிடைக்கிறது. பெட்ரோல் வேரியண்ட் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எக்ஸ் டிரைவ் 40i எம் ஸ்போர்ட் விலை ரூ.82.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



புதிய பி.எம்.டபுள்யூ. கார் இதுவரை வெளியான எக்ஸ்5 மாடல்களில் பெரிய கார் ஆகும். இந்த கார் 35 எம்.எம். நீளமாகவும், 32 எம்.எம். அகலமாகவும், 11 எம்.எம். உயரமாக இருக்கிறது. இருசக்கரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய காரின் பூட் ஸ்பேஸ் 645 லிட்டர்களாக இருக்கிறது.

பி.எம்.டபுள்யூ. மாடலின் உள்புறம் மற்ற மாடல்களை போன்று வழங்கப்படுகிறது. இது பி.எம்.டபுள்யூ. லைவ் காக்பிட் புரோஃபஷனல் டிஸ்ப்ளே என அழைக்கப்படுகிறது. இத்துடன் ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகின்றன.

மற்ற பி.எம்.டபுள்யூ. மாடல்களை போன்று புதிய காரிலும் வாய்ஸ் கமாண்ட் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கேபின் லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபோர்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், கார்பெட் லைட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கியர் செலக்டர் லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News