தொழில்நுட்பம்
பேஸ்புக்

இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2020-08-17 06:39 GMT   |   Update On 2020-08-17 06:39 GMT
இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தனியார் நிறுவன சமூக வலைதள சேவைகளை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர்கள் போலியான செய்தியை பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள்.  தேர்தலில் அதனை பயன்படுத்தி செல்வாக்கை பெற முயற்சிக்கின்றனர்.  இறுதியாக அமெரிக்க ஊடகம், பேஸ்புக்கின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.



சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை திரித்து கூறும் வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில், வெறுப்பு பேச்சுகளுக்கான பேஸ்புக்கின் விதிகள் இந்திய அரசியலில் வேறுபடுகிறது என்ற வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.  ஆளும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு பேச்சுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதில் பேஸ்புக் பாரபட்சம் காட்டுகிறது.

இந்த விவகாரம் குறித்த விசாரணையை துவங்க கூட்டு பாராளுமன்ற கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என காங்கிஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மேகென் தெரிவித்து இருக்கிறார். 
Tags:    

Similar News