தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ41

பட்ஜெட் பிரிவில் இரு 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியா கொண்டுவரும் சாம்சங்?

Published On 2021-03-29 04:24 GMT   |   Update On 2021-03-29 04:24 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

கேலக்ஸி எம்42 5ஜி மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல்களை வெளியிடுவது பற்றி சாம்சங் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

இரு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் தற்போது கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில், கேலக்ஸி எம்42 5ஜி SM-M426B/DS, கேலக்ஸி ஏ42 5ஜி SM-A426B/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. 



முன்னதாக கேலக்ஸி எம்42 5ஜி மாடல் வைபை அலையன்ஸ் மற்றும் ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இது கேலக்ஸி ஏ42 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்பட்டது. 

கேலக்ஸி எம்42 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். முன்னதாக அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ42 5ஜி மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன.
Tags:    

Similar News