செய்திகள்
ரெயில்வே வாரியம்

ரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு - 50 அதிகாரிகள் இடமாற்றம்

Published On 2019-11-19 22:45 GMT   |   Update On 2019-11-19 22:45 GMT
ரெயில்வே வாரியத்தில் செயல்திறனை மேம்படுத்த இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் ரெயில்வே வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 200-ல் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டது.
புதுடெல்லி:

ரெயில்வே வாரியத்தில் 25 சதவீதம் ஆட்குறைப்பு செய்து, செயல்திறனை மேம்படுத்த இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் ரெயில்வே வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 200-ல் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டது.

இயக்குனர் அந்தஸ்து அதிகாரிகள் 50 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையொட்டி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “குறைந்த அளவிலான அதிகார வர்க்கம் என்ற பிரதமர் பார்வையின் ஒரு அங்கம்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை. குறைவான எண்ணிக்கையிலான அதிகாரிகளை கொண்டு சிறந்த நிர்வாகம் தரப்படும். தங்கள் வேலையை திறம்பட செய்வதற்கு வாய்ப்பு உள்ள இடங்களுக்கு இந்த 50 அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.

ரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்பது 2000-ம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News