தொழில்நுட்பச் செய்திகள்
ஏர்டெல்

ஒரே ரீசார்ஜ் திட்டத்திற்கு இரண்டு விலைகளா!- வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஏர்டெல்

Published On 2022-02-16 08:47 GMT   |   Update On 2022-02-16 10:02 GMT
ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி ஏர்டெல்லின் ரூ.2999, ரூ.3359 ஆகிய இரண்டு திட்டங்களும் ஒரே பலனை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

ஏர்டெல்லின் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்துடன்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.



இதேபோன்று ஏர்டெல்லின் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டத்திற்கும் இதே பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவை கிடைக்கின்றன. மேலும், ரூ.3,359 திட்டத்தில் உள்ளது போன்றே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகியவையும் இந்த திட்டத்தில் வழங்கபடுகின்றன.

இந்த அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ஏர்டெல் நிறுவனத்திடம் பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News