செய்திகள்
கோப்புப்படம்

கங்கையில் உடல்கள் மிதந்த விவகாரம் : மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2021-05-14 01:43 GMT   |   Update On 2021-05-14 01:43 GMT
நாடு முழுவதும் கொரோனாவால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த உடல்களை அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்வதிலும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனாவால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த உடல்களை அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்வதிலும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் ஏராளமான உடல்கள் சமீபத்தில் மிதந்து வந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.



இந்த விவகாரத்தை தற்போது தேசிய மனித உரிமை ஆணையமும் கையில் எடுத்துள்ளது. அதன்படி, இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய ஜலசக்தி அமைச்சக செயலாளர் மற்றும் உத்தரபிரதேசம், பீகார் மாநில தலைமை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இறந்த உடல்களை அடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்வது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கங்கையில் உடல்களை வீசுவதை கண்காணிக்கவும் அதிகாரிகள் தவறிவிட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
Tags:    

Similar News