ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி

2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் வெளியீட்டு விவரம்

Published On 2021-03-30 07:50 GMT   |   Update On 2021-03-30 07:50 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் மாடல்கள் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

மேம்பட்ட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் முன்பை விட அதிக ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் கிட்னி கிரில் மேம்படுத்தப்பட்டு பிஎம்டபிள்யூ லேசர் லைட் தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. எனினும், இது எம் ஸ்போர்ட் வேரியண்டில் வழங்கப்படுகிறது.



உள்புறம் தற்போதைய மாடலை போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் மற்றும் ஐ டிரைவ் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேட் கொண்டிருக்கிறது.

2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News