செய்திகள்
மழை

வேலூர், திருவண்ணாமலையில் திடீர் மழை

Published On 2021-02-20 05:26 GMT   |   Update On 2021-02-20 05:26 GMT
திருவண்ணாமலை சுற்றுப்புற கிராமங்களான அடி அண்ணாமலை, வேங்கிக்கால், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
வேலூர்:

திருவண்ணாமலையில் ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாத நிலையில் இன்று காலை திடீரென 6 மணி முதல் 8 மணி வரை மழை பெய்தது. ஓரளவு வேகமாக பெய்த இந்த மழையால் கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வந்த வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

மழைக்காலம் முடிவடைந்துவிட்டது. இனிமேல் மழை பெய்யாது என்று நினைத்திருந்த நிலையில் இன்று காலை மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு சென்றுவந்ததால் இந்த மழை பெய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை சுற்றுப்புற கிராமங்களான அடி அண்ணாமலை, வேங்கிக்கால், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

இந்த மழையால் வெயிலில் வாடிய பயிர்கள் புத்துணர்வு பெற்று உள்ளன. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்குமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேலூரில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியவர்கள், ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்து சென்றனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்காற்று வீசியது.
Tags:    

Similar News