செய்திகள்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா

புகார் கொடுக்க வந்த பெண்ணை அவமதித்த போலீஸ்காரர் - வீடியோ வெளியிட்டு பிரியங்கா கண்டனம்

Published On 2019-07-26 00:36 GMT   |   Update On 2019-07-26 00:36 GMT
உத்தரபிரதேசத்தில் ‘ஈவ் டீசிங்’ புகார் கொடுக்க சென்ற பெண்ணை அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவமதித்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தில் ஒரு போலீஸ் நிலையத்தில் ‘ஈவ் டீசிங்’ புகார் கொடுக்க சென்ற பெண்ணை அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவமதித்தார். அதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அந்த பெண், தன்னை ஒரு கும்பல் ஈவ் டீசிங் செய்ததாகவும், தட்டிக்கேட்ட தனது சகோதரர் தாக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால், அப்பெண் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, அவரையும், குடும்பத்தையும் அவமதிக்கும் வகையில் ஒரு போலீஸ்காரர் பேசியுள்ளார். பெண்களுக்கு நியாயம் அளிப்பதன் முதல் நடவடிக்கையே அவர்கள் சொல்வதை கவனிப்பதுதான். ஆனால், உத்தரபிரதேசத்தில் ஒருபுறம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதும், மறுபுறம் சட்டத்தை பாதுகாப்பவர்கள் இப்படி நடந்து கொள்வதும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News