ஆன்மிகம்
நாகர்கோவில் நாகராஜா கோவில்

நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

Published On 2021-01-28 07:03 GMT   |   Update On 2021-01-28 07:03 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டிய சொல்லரங்கம், சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை நேரங்களில் வாகன பவனி நடந்தது.

8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கலெக்டர்அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து 10-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இன்னிசை சொல்லரங்கம் நடைபெறும். இதனையடுத்து ஆறாட்டு துறையில் இருந்து அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News