செய்திகள்
கொரோனா வைரஸ்

கரூர் மாவட்டத்தில் குறைய தொடங்கிய கொரோனா

Published On 2021-06-14 11:12 GMT   |   Update On 2021-06-14 11:12 GMT
கரூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 1,758 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 95 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 402 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 2 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 1,758 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News