ஆன்மிகம்
சாமுண்டீஸ்வரி கோவில்

சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை

Published On 2020-08-18 04:14 GMT   |   Update On 2020-08-18 04:14 GMT
கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் மைசூரு அருகே சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரண்மனை நகரமான மைசூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 10,535 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மைசூரு அருகே சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வருகிற 19-ந்தேதி மற்றும் 21-ந்தேதி பக்தர்கள் வர தடை விதித்து மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் அறிவித்துள்ளார். அதாவது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அனைவரும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News