செய்திகள்
மாத்தூர் ரெங்கபாளையம் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்.

வத்திராயிருப்பு அருகே தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2021-01-12 13:25 GMT   |   Update On 2021-01-12 13:25 GMT
வத்திராயிருப்பு அருகே தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்தநிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூர் ரெங்க பாளையத்தில் பெய்த தொடர்மழையினால் 10 ஏக்கருக்கும் மேலான நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் நாங்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்து உள்ளோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News