செய்திகள்
விஜயகாந்த்

தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியல்- விஜயகாந்த் அறிவிப்பு

Published On 2020-12-31 01:55 GMT   |   Update On 2020-12-31 01:55 GMT
2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை:

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. சார்பில் 234 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக 225 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி நியமித்தார். இந்தநிலையில் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீபெரும்புதூர் (தனி) -பி.வி.திருமால், தாம்பரம்-ஆர்.ஆனந்தராஜ், திருப்போரூர்- கே.ரகுராமன், பல்லாவரம்- கே.மகாதேவன், செங்கல்பட்டு- கே.என்.ஜெயபால், செய்யூர் (தனி) -சிவா, காஞ்சீபுரம்- எஸ்.லட்சுமணன், மதுராந்தகம் (தனி) - ஏ.விஜயகுமார், உத்தரமேரூர்- கே.பி.அருண்குமார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News