ஆன்மிகம்
புனித லூர்து அன்னை

அழகப்பபுரத்தில் புனித லூர்து அன்னை திருவிழா

Published On 2021-02-13 05:11 GMT   |   Update On 2021-02-13 05:11 GMT
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.
பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் உள்ள மசபியேல் என்ற குகையில் பெர்னதெத் என்ற இளம்பெண்ணுக்கு 1858-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி ஏசுவின் தாய் மரியாள் காட்சி கொடுத்தார்.

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புனித லூர்து அன்னை திருவிழாவாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது.

அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலய மைதானத்தில் தொடர் ஜெபமாலை நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு அழகப்பபுரத்தில் முக்கிய வீதிகள் வழியாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபமாலை ஜெபித்தபடி பவனியாக சென்றனர். தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.
Tags:    

Similar News