ஆன்மிகம்
வேளாங்கண்ணி மாதா பேராலயம்.

வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதை தவிர்க்க அறிவுறுத்தல்

Published On 2021-08-04 03:39 GMT   |   Update On 2021-08-04 03:39 GMT
வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும்.
வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேளாங்கண்ணியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகாபதி, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவக உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர், கார் உரிமையாளர் சங்கத்தினர், மருந்து கடை உரிமையாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியில் உள்ள வணிகர் சங்கத்தினரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாகை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என மதத்தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வருகிற 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மதத்தலைவர்கள், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அறிவிக்கப்படும். வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும் ..வணிக நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News