செய்திகள்
இந்து முன்னணி

கொரோனாவை காரணம் காட்டி இந்து மத வழிபாடுகளில் உரிமைகளை மறுக்க கூடாது-இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை

Published On 2021-10-08 08:07 GMT   |   Update On 2021-10-08 08:07 GMT
மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்கள், ஆறுகள், கடல்கள் போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
திருப்பூர்:

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதித்த தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்கள், ஆறுகள், கடல்கள் போன்ற இடங்களில் முன்னோர்களுகு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் பலடங்களில் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், திரையரங்குகள், பள்ளிகள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். ஆனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு மட்டும் தடை விதிப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே  இனி வரும் காலங்களில் இந்து மத வழிபாட்டு விஷயங்களில் கரோனாவைக் காரணம் காட்டி உரிமைகளை மறுக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News