உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-04-16 06:52 GMT   |   Update On 2022-04-16 06:52 GMT
நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையில், நிலைய போக்குவரத்து அலுவலர் பி.வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.
வெள்ளக்கோவில்:

சென்னை வருவாய் நிர்வாக ஆணையர்  நிலப்பதிவு அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்குப் பிறகு, 1908 ம் ஆண்டு, சென்னை நகர தீயணைப்புப் படை உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் தீயணைப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவ்வாறு நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க துறையில் மீட்புப்பணிகளின்போது வீரமரணமடைந்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14  ந்தேதி தீத்தொண்டு நாள், வார விழா தீயணைப்புத் துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தீயணைப்பு உடைகள், உபகரணங்களை வைத்து நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையில், நிலைய போக்குவரத்து அலுவலர் பி.வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.
Tags:    

Similar News