செய்திகள்
சிகிச்சையை விளக்கும் டாக்டர்

ஜெர்மனியை விரட்டும் கொரோனா - ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

Published On 2021-11-20 19:34 GMT   |   Update On 2021-11-20 19:34 GMT
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிப்பு அடைந்துள்ளன.
பெர்லின்:

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. 
 
இந்நிலையில், ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 30 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 126 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 99 ஆயிரத்து 525 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனாவில் இருந்து 46.10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 6.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் கொரோனா 4-வது அலை தாக்கி இருப்பதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.   

Tags:    

Similar News