செய்திகள்

கேரளாவில் ஐஏஎஸ் தேர்வில் வென்ற முதல் பழங்குடியின பெண்ணுடன் ராகுல் காந்தி சந்திப்பு

Published On 2019-04-17 12:58 GMT   |   Update On 2019-04-17 12:58 GMT
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
திருவனந்தபுரம்:

2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா (22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார்.

வயநாட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஸ்ரீதன்யா குடும்பத்தினரை வரவழைத்த ராகுல் காந்தி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.  அப்போது அவர் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
Tags:    

Similar News