செய்திகள்
விராட் கோலி

விராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது

Published On 2020-11-29 16:32 GMT   |   Update On 2020-11-29 16:32 GMT
இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த 24 இன்னிங்சில் சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி. உலகின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். டெஸ்டில் 27 சதம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 43 சதம் என 70 சதங்கள் விளாசியுள்ளார். அதிக சதம் அடித்துள்ள சச்சின் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் எனக் கருதப்படுகிறது.

ஒரு தொடரில் ஒரு போட்டியிலாவது சதம் அடித்து விடுவார். ஆனால் கடந்த 24 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் உள்ளார். இன்றைய போட்டியில் 87 பந்தில் 89 ரன்கள் அடித்து 11 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியா இருநாடுகளுக்கு இடையிலான போட்டியில் 2-வது முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன் 2015- 2016-ல் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது.

விராட் கோலி 24 இன்னிங்சில் சதம் அடித்ததில்லை. 24 இன்னிங்சில் 839 ரன்களே அடித்துள்ளார். சராசரி 39.95 ஆகும். இதில் 7 முறை அரைசதம் அடித்துள்ளார். ஆனால் அதை சதமாக மாற்ற முடியவில்லை. விராட் கோலி சராசரியாக 6.6 இன்னிஸ்க்கு ஒரு சதம் அடித்துள்ளார்.

இந்தத் தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் எதிராக சதம் அடித்ததில்லை.
Tags:    

Similar News