உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நல்லாற்றை தூர்வார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Published On 2021-12-09 07:17 GMT   |   Update On 2021-12-09 07:17 GMT
கோழி, மீன் உள்ளிட்ட பல்வேறு இறைச்சி கழிவுள் கொட்டப்படுவதால் நீர்வழிப்பாதை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நல்லாற்றை தூர்வார வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நல்லாறு புதர் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. குறிப்பாக கோழி, மீன் உள்ளிட்ட பல்வேறு இறைச்சி கழிவுள் கொட்டப்படுவதால் நீர்வழிப்பாதை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே உடனடியாக நல்லாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதி விவசாயிகளின் நீராதாரமாக உள்ள நல்லாற்றில் போதுமான இடங்களில் சிறு தடுப்பணைகளும், சுள்ளிக்காடு அருகே ஆற்றின் குறுக்கே பாலமும் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News