செய்திகள்
ஜோ ரூட்

இது சரியான நேரம் அல்ல: ஐபிஎல் ஏலத்தில் இடம் பெறாதது குறித்து ஜோ ரூட் விளக்கம்

Published On 2021-02-12 10:53 GMT   |   Update On 2021-02-12 10:53 GMT
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஜோ ரூட், ஐபிஎல் போட்டியில் விளையாடுவது இது சரியான நேரம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நடைபெறும் டி20 லீக்குகளில் ஐபிஎல் மிகவும் பிரபலம். இதில் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்களைத் தவிர்த்து, மற்ற நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் விளையாடி வருகின்றனர்.

இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்களில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர். ஆனால், ஜோ ரூட் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது கிடையாது.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி ஏலத்தில் கலந்து கொள்ள ஏராளமான வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். அதில் 292 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் ஏலத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், ஐபிஎல் தொடரில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் ஆசைப்பட்டேன். அந்த அனுபவத்தை அனுபவிக்க விரும்புகிறேன்.

இந்த வருடம் ஏராளமான சர்வதேச கிரிக்கெட் உள்ளன. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் அதிகமாக உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறுவதை சரியான நேரம் என நான் நினைக்கவில்லை. அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன். அல்லது குறைந்த பட்சம் ஐபிஎல் ஏலத்திலாவது இடம் பெறுவேன்.

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாட விரும்புகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான சவால்கள்’’ என்றார்.
Tags:    

Similar News