செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Published On 2019-08-10 07:09 GMT   |   Update On 2019-08-10 07:09 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,656-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறு முகத்துடன் இருக்கிறது.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை காரணமாக தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது.

முதலில் பவுன் விலை ரூ.27 ஆயிரத்தை தாண்டியது. அதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி ரூ.28 ஆயிரத்தை தாண்டியது. இன்றும் தங்கம் விலை உயர்ந்தது.

இன்று காலை ஆபரண தங்கம் கிராம் ரூ.3,582-க்கும், ஒரு பவுன் ரூ.28,656-க்கும் விற்பனையானது.

அதாவது நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.13 உயர்ந்தது. பவுனுக்கு ரூ.104 அதிகரித்தது. இதனால் பவுன் ரூ.29 ஆயிரத்தை தற்போது நெருங்கியுள்ளது.

கடந்த 1-ந்தேதியில் இருந்து இன்று வரை 10 நாட்களுக்கு தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,176 அதிகரித்து உள்ளது.

வெள்ளி விலை கிராம் ரூ.47.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.47,300 ஆகவும் இருந்தது.
Tags:    

Similar News