செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் பேரணி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் பேரணி

Published On 2021-09-09 02:15 GMT   |   Update On 2021-09-09 02:15 GMT
தலிபான்கள் அறிவித்துள்ள புதிய இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூல் :

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுடன் கடந்த 20 ஆண்டுகளாக சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நாட்டை முழுமையாக கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.

தலிபான்களின் இந்த புதிய அரசில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் கடந்த கால தலிபான் ஆட்சியில் இருந்தது போலவே இந்த முறையும் பெண்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள புதிய இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான்களின் கொடிகளை கைகளில் ஏந்தி பேரணியாக சென்ற பெண்கள் தலிபான்களே தங்களின் ஒரே நம்பிக்கை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News