செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 376 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2021-04-06 11:52 GMT   |   Update On 2021-04-06 11:52 GMT
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 376 பேருக்கு தொற்று உறுதியானது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் இறுதியில் தினமும் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை 200 வரை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு 300-ஐ தொட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 376 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது.

கோவையில் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ., கொரோனா சிகிச்சை மையம், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 138 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 404 ஆனது.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ., கொரோனா சிகிச்சை மையம், தனியார் மருத்துவமனைகளில் 2,436 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர பிற மாவட்டங்களை சேர்ந்த 196 பேர் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கடந்த மாதம் 31-ந் தேதி 66 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகினார். அதன்பிறகு கடந்த 5-வது நாளாக கொரோனாவுக்கு யாரும் பலியாக வில்லை.

கொரோனா தொற்றுக்கு இதுவரை 694 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News