ஆன்மிகம்
முத்துமாரியம்மன்

திருவாடானை அருகே முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

Published On 2021-09-16 04:57 GMT   |   Update On 2021-09-16 04:57 GMT
திருவாடானை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள், பொங்கல் வைபவம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவாடானை தாலுகா, கல்லூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணியை தொடங்கும் முன்பு மழை வேண்டி இங்குள்ள முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் சார்பில் அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டு விதைப்பு பணிகளை தொடங்குவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு முத்துமாரியம்மன் கோவிலில் கல்லூர் கிராம மக்கள் சார்பில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.இதனையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள், பொங்கல் வைபவம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் கிராம மக்கள் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.

இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News