லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல்

குழந்தைகள் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல்

Published On 2020-06-20 04:08 GMT   |   Update On 2020-06-20 04:08 GMT
குழந்தைகளுக்கோ, சிறுமியர்களுக்கோ அடிக்கடி ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ ஏற்பட்டால், அது உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டிய விஷயம்.
சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், கோடைகாலத்தில் அதிகரிப்பது வாடிக்கையானது.. அது ஏன் தெரியுமா?

நமது உடலில் இருந்து சுவாசித்தல் மற்றும் வியர்வை மூலமாக, நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். இந்த இருவகை மூலம் தினமும் 600 முதல் 700 மி.லி. நீர் வெளியேறும். கோடை காலத்தில் இந்த வகைகளில் வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கும். ஒருவர் தினமும் ஒன்றரை லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இந்த அளவுக்கு வெளியேற்றப்பட வேண்டுமானால், 2 முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால், சிறுநீர் வெளியேறும் அளவு இயல் பாகவே குறைந்து போகும். இதனால் உடலுக்கு தேவையில்லாத உப்பு, கழிவுகளை உடலில் இருந்து சிறுநீர் மூலமாக அப்புறப்படுத்தும் தன்மை குறைந்துவிடும்.

குறைந்த அளவே சிறுநீர் வெளியேறினால், சிறுநீரில் நிறமாற்றம் தோன்றும். அடர்த்தியாக சிறுநீர் வெளியேறும் பட்சத்தில் சிறுநீர் பையில் இருந்து, சிறுநீர் முழுமையாக வெளியேறாது. சிறிதளவு உள்ளேயே தேங்கிவிடும். இதனால் தொற்றுக் கிருமிகள் அதிகம் வளர்ந்து, சிறுநீரகக் கல் உருவாகும்.

சிறுவர் - சிறுமியர் ‘டாய்லெட்’ சுத்தம் இல்லாததாலோ, அதை பயன்படுத்த விரும்பாததாலோ சிறுநீரை அடக்கி வைத்துவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ‘இன்பெக்‌ஷன்’ இருந்தால், அவர்களால் சிறுநீரை தேக்கிவைக்க முடியாது. அதனால் நமைச்சலுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள். நினைத்த உடன் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு நீர் கசிவும் ஏற்படும்.

குழந்தைகளுக்கோ, சிறுமியர்களுக்கோ அடிக்கடி ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ ஏற்பட்டால், அது உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டிய விஷயம். முறையாக சிகிச்சை பெறாவிட்டால் அந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியே பாதிக்கப்படும். 15 வயதுக்குரியவர்கள் 7, 8 வயது போல் தோன்றுவார்கள். ஒன்று முதல் 5 வயது வரை குழந்தை களுக்கு சிறுநீரக உறுப்புகள் நன்றாக வளரும் காலகட்டமாகும். அக்கால கட்டத்தில் சிறு நீரக பிரச்சினை ஏற்பட்டு, முறைப்படி சிகிச்சை பெறாவிட்டால், பிற்காலத்தில் சிறுநீரக உறுப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

சில குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடத்தில் பிறவியிலேயே தோல் ஒட்டிப்போய் இருக்கும். அவர்கள் சிறுநீர் கழிக்க விரும்பும்போது முன் பகுதி பலூன் மாதிரி உப்பிப்போகும். சிலருக்கு சிறுநீர்பை வீக்கம், கிட்னி லேசாக இடம் மாறி இருத்தல் போன்ற பல தொந்தரவுகள் பல விதங்களில் உருவாகக் கூடும். அவர்களின் சிறுநீரை சோதனை செய்து ‘இன்பெக்‌ஷன்’ எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறியலாம். ‘அல்ட்ரா சவுண்ட்ஸ் கேனிங்’ மூலம் எல்லாவித சிறுநீரக பாதிப்புகளையும் கண்டறிந்துவிட முடியும். கிட்னி நிலை, சிறுநீர் பையின் பாதிப்புகள், பிறவியிலேயே ஏற்படும் நீர் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள் போன்ற வற்றையும் பார்த்து முறையான சிகிச்சையை உடனுக்குடன் அளித்திட முடியும்.

‘அல்ட்ரா சவுண்ட்’ சோதனையை நடத்து வதற்கு ஒருமணி நேஇஇரத்த ிற்கு முன்பு நிறைய தண்ணீர் பருகிவிட்டு, சிறுநீர் கழிக்காமல் சோதனைக்கு செல்லவேண்டும்.

சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால், காலையில் எழுந்ததும் முகத்தைப் பார்த்தால் வீக்கமாகத் தோன்றும். அப்போதே உணராவிட்டால் உடலில் நீர் போடும். பின்பு வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும். கோடைகாலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் சிறுநீரக தொந்தரவுகள் ஏற்படாத அளவுக்கு குழந்தைகளின் உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அறிகுறிகள்

நீர் கடுப்பால் குழந்தைகள் அழுது அவதிப்படுதல்

சிறுநீர் வெளியேறும் நுனிப்பகுதியில் நமைச்சல் ஏற்படுவதால், அடிக்கடி பிறப்பு உறுப்பின் நுனிப் பகுதியை குழந்தைகள் அழுத்துதல்.

இன்பெக்‌ஷன் ஏற்பட்டு குளிர் காய்ச்சல் தோன்றும்.

கிட்னியிலோ, சிறுநீர் பையிலோ இன்பெக்‌ஷன் ஏற்பட்டு, சிறுநீர் கலங்கலாக வெளியேறுதல்.

சிறுநீரில் இஇரத்த ம் வெளியேறுதல்.

உள்ளே கல் உருவாகி, அதன் மூலம் சிறுநீரகத்தில் வலியோ, வயிற்று வலியோ ஏற்படுதல்.
Tags:    

Similar News