உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 130 பேர் மீது வழக்கு

Published On 2022-01-18 03:46 GMT   |   Update On 2022-01-18 03:46 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 130 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அரசு அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்படி 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள், 112 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 325 போலீசார், 200 ஊர்காவல் படையினர் என மொத்தம் 655 பேர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த ஊரடங்கால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்ததாக 125 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதியை மீறியதாக 5 வழக்குகள் என 130 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
Tags:    

Similar News