செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்

Published On 2021-11-29 21:11 GMT   |   Update On 2021-11-29 21:11 GMT
கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி கூறுகையில், ‘தடுப்பூசி போட மறுக்கும் ஆசிரியர்களால் மாணவர் நலன் பாதிக்கப்படும். சில ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பள்ளிக்கு வருகிறார்கள். இதனை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இதனால் 47 லட்சம் மாணவர்கள், மக்களின் நலன் கேள்விக்குறியாகி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் மதத்தை காரணம் காட்டி தடுப்பூசி போட ஆசிரியர்கள் சிலர் மறுப்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News