உள்ளூர் செய்திகள்
ரேசன் அரிசி கடத்திய வேன்கள்.

10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-04-17 10:14 GMT   |   Update On 2022-04-17 10:14 GMT
திருமங்கலத்தில் 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருமங்கலம்

மதுரை மாவட்டம்  திரு மங்கலம் பகுதியில் வாக னங்களில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக கோட்டாட்சியர் அனிதாவுக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதனை தொடர்ந்து அவரது உத்தரவுப்படி திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன், டவுன் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை விருதுநகர் உசிலம்பட்டி ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது தேவர்சிலை அருகே வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதே போல் உசிலம்பட்டி ரோட்டில் வந்த மற்றொரு மினிலாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அதில 3 டன் அரிசி இருந்தது. 

இந்த 7 டன் அரிசியை மினி லாரிகளுடன் வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன் பறிமுதல்செய்து திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தினார். அதிகாரிகளை கண்டவுடன் லாரிகளை ஒட்டி வந்த டிரைவர் மற்றும் அரிசி கடத்தி வந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர். 

 அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உசிலம்பட்டி ரோட்டில் ஒரு பாழடைந்த வீட்டில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கு சோதனை நடத்திய  அதிகாரிகள் அங்கிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 10 டன் அரிசியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக உணவு தடுப்பு கடத்தல் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 
Tags:    

Similar News