செய்திகள்
கோப்புபடம்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான எழுத்துத்தேர்வு - 16ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-09-15 06:02 GMT   |   Update On 2021-09-15 06:02 GMT
முதற்கட்டமாக அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில் நடந்தது.
உடுமலை:

உடுமலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 107 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு மையம் சீனிவாசா பள்ளியில் அமைக்கப்படுகிறது.

இவர்களில் 46 பேருக்கு ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் முதற்கட்டமாக அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில் நடந்தது. இந்த தேர்வில் 43 பேர் பங்கேற்றனர்.  

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்;

10-ம்வகுப்பு தனித்தேர்வர்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் 16-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. தற்போது, விண்ணப்பித்தவர்களுக்கு ‘ஹால்டிக்கெட்’ கிடைக்கப் பெற்ற நிலையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News