தொழில்நுட்பம்
சியோமி ஹைப்பர்சார்ஜ்

8 நிமிடங்களில் முழு சார்ஜ் - அசத்தலான பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த சியோமி

Published On 2021-05-31 11:36 GMT   |   Update On 2021-05-31 11:36 GMT
சியோமி நிறுவனம் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


சியோமி 200 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. 



இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். முன்னதாக சியோமி அறிமுகம் செய்த எம்ஐ 10 அல்ட்ரா மாடலில் 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. புது அறிவிப்பின் மூலம் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக சியோமி இருக்கிறது. 

200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் சியோமி வெளியிட்டு இருக்கிறது. வீடியோவில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் ஆக 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். 
Tags:    

Similar News