ஆன்மிகம்
அகோபில வரதராஜ பெருமாள்

பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா ரத்து

Published On 2020-08-28 04:07 GMT   |   Update On 2020-08-28 04:07 GMT
பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக் கான பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில் ஆகமவிதிப்படி கோவிலில் பூஜைகள் மட்டும் நடைபெறும். மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு, தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.

மற்றபடி பூஜைகள் அனைத்தும் நடைபெறும். இதுதவிர திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், வேளஸ்வரர் கோவில் ஆகியவற்றில் வருகிற 31-ந்தேதி வருடாபிஷேகம் நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News