தொழில்நுட்பம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஒப்போவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-02-24 10:12 GMT   |   Update On 2019-02-24 10:12 GMT
ஒப்போ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #5GSmartphone



ஒப்போ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.  புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கிறது. 

ஸ்மார்ட்போன் வெளியாகும் வரை அதன் பெயரை ரகசியமாக வைக்க ஒப்போ முடிவு செய்துள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பார்க்க ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி ப்ரோடோடைப் மாடல் ஒன்றையும் ஒப்போ அறிமுகம் செய்தது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 5ஜி ப்ரோடோடைப் மாடல் டெவலப்பர் வெர்ஷன் என்றும் இதில் தகவல் பரிமாற்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5ஜி சேவையை வழங்குவதற்கென ஒப்போ நிறுவனம் ஸ்விஸ்காம், டெல்ஸ்ட்ரா, ஆப்டஸ் மற்றும் சிங்டெல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.



இதுதவிர ஒப்போ 5ஜி லேண்டிங் ப்ராஜெக்ட் எனும் திட்டத்தை ஒப்போ அறிவித்திருக்கிறது. இத்துடன் மென்பொருள் டெவலப்பர்களுடன் இணைந்து 5ஜி கிளவுட் கேமிங் சேவையை வழங்கவும் ஒப்போ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒப்போ பிரீனோ என்ற பெயரில் ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை தனது சாதனங்களில் வழங்க இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் வரும் நாட்களில் குவால்காம் மற்றும் எரிக்சன் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போனுடன் 5ஜி மொபைல் கிளவுட் கேமிங் சேவையும் அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News