செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்

சென்னையில் 21 சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கவில்லை- மாநகராட்சி கமிஷனர் தகவல்

Published On 2020-11-27 01:41 GMT   |   Update On 2020-11-27 01:41 GMT
சென்னையில் 21 சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழையின் போது சென்னைக்கு 80 செ.மீ அளவில் மழை இருக்கும். அந்த வகையில் தற்போது வரை 55 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அடுத்து 35 நாட்கள் மழைக்காலம் இருக்கிறது. மீதமுள்ள 25 செ.மீ மழை அடுத்த 35 நாட்களில் கிடைக்கும்.

கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை அகற்றுவது மாநகராட்சிக்கு சவாலாக இருந்தது. இதுவரை சென்னையில் 387 மரங்கள் விழுந்துள்ளது.

அதில் தற்போது வரை 350 மரங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் 100 சதவீதம் கவனித்து வருகிறோம். மழை மற்றும் வெள்ளம் போன்ற நேரங்களில் சுரங்கப்பாதை வெகுவாக பாதிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் 22 சுரங்கப்பாதைகள் உள்ளது. அதில் 21 சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கவில்லை. அங்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்துவது சவாலாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News